November 18, 2009

மனித மூளை

{{{texttitle}}}
மனித மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி. பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது.

தாவரம்



தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம் செடி, கொடி போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தமரங்கள், செடிகள், கொடிகள், போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் ( ferns), பாசி (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), பூஞ்சணங்கள் போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

பயன்கள்

இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். சுமார் 350,000 வகையான பாசி, புல், செடி, கொடி, மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளன. இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் அகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், மண்ணெண்ணை, டீசல் ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது.
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின. தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன.

வரைவிலக்கணம்

கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் எல்லா உயிரினங்களையும், தாவரங்கள் (நிலைத்திணை), விலங்குகள் (நகர்திணை) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். 18 ஆம் நூற்றாண்டில் லின்னேயசின் முறைப்படி(Linnaeus' system), இவை வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு இராச்சியங்கள் (Kingdoms) ஆகின. வெஜிட்டபிலியா இராச்சியம் பின்னர் பிளாண்ட்டே (Plantae) என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பிளாண்ட்டே இராச்சியத்தில் ஆரம்பத்தில் அடக்கப்பட்ட பல வகைகள் தொடர்பற்றவையாக இருப்பது அறியப்பட்டது.பூஞ்சணங்கள் மற்றும் பல வகை பாசிகள் (அல்காக்கள்) வேறு இராச்சியப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இருந்தாலும் இவை பல சூழ்நிலைகளில் தாவரங்களாகவே இன்னும் கருதப்பட்டு வருகின்றன.
தாவரங்கள் என்று கூறும்போது அவை பின்வரும் மூன்று கருத்துருக்களில் ஒன்றால் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன:
  • நிலத் தாவரங்கள்: இவை எம்பிரையோபைட்டா, மீட்டாபைட்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
  • பச்சைத் தாவரங்கள்: இதற்கு விரிடிபைட்டா, குளோரோபினாட்டா போன்ற பெயர்களும் உண்டு. இதற்குள் முன்னர் குறிப்பிட்ட நிலத்தாவரங்களும் அடங்குகின்றன. அவற்றுடன், கரோபைட்டா, குளோரோபைட்டா என்பனவும் அடங்கும்.
  • ஆர்க்கீபிளாஸ்டிடா: பிளாஸ்டிடா, பிரிமோபிளாண்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இதற்குள் பச்சைத் தாவரங்கள் அனைத்தும் அடங்குவதுடன் ரொடோபைட்டா, குளுக்கோபைட்டா என்பனவும் அடங்குகின்றன.
தாவரங்களுக்கான பெயரிடல் தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (International Code of Botanical Nomenclature), வளர்க்கும் தாவரங்களுக்கான அனைத்துலகப் பெயரிடல் நெறிமுறை (International Code of Nomenclature for Cultivated Plants) ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

தொழில்நுட்பம்



தொழில்நுட்பம் என்பது, கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழில்நுட்பம்; பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆளுவதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும். மனித இனத்தின் தொழில்நுட்பப் பயன்பாடு, இயற்கை வளங்களைச் எளிமையான கருவிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தியதுடன் தொடங்குகிறது. வரலாற்றுக்கு முந்திய கண்டுபிடிப்புக்களான, தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தல், உணவு வளங்களைப் பெருக்கிக் கொள்ளவும், சில்லின் கண்டுபிடிப்பு போக்குவரத்துச் செய்வதற்கும், சூழலைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவின. பிந்திய காலக் கண்டுபிடிப்புக்களான, அச்சியந்திரம், தொலைபேசி, இணையம் என்பன தொடர்புகளுக்கான இயற்பியல் தடைகளை இல்லாமலாக்கியதுடன், மனிதர்கள் உலக அளவில் தொடர்புகளை வைத்துக்கொள்ளவும் வழி வகுத்தன. எனினும் எல்லாத் தொழில் நுட்பங்களுமே ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனுக்காகவோ அல்லது உலக அமைதிக்காகவோ பயன்படுகின்றன என்பதில்லை. கொலை ஆயுதங்களின் வளர்ச்சிக்கு வரலாறு முழுவதும் தொழில்நுட்பம் பயன்பட்டிருக்கிறது. எளிமையாக கத்தி முதல், அணுவாயுதங்கள் வரை அதிகரித்துவரும் அழிப்பு ஆற்றலுடன் கூடிய ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பம் சமூகத்தையும், அதன் சுற்றாடலையும் பல வழிகளில் பாதித்துள்ளது. பல சமுதாயங்களில், உயர்ந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்குத் தொழில்நுட்பம் உதவியுள்ளது. பல தொழில்நுட்பச் செயல்முறைகள், மாசுறுதல் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளை உருவாக்குவதுடன், இயற்கை வளங்களையும் அளவு மீறிச் சுரண்டுகிறது.

November 17, 2009

ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாசம்?

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம். இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை (இஃOகுஉஈ ஏஉஅகீகூ) இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.

1956ம் வருடம் அமெரிக்க பேராசிரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, இதய துடிப்பை (இயக்கத்தை) நிறுத்தி 5 மணி நேரம்கூட இதயத் துடிப்பில்லாமல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முதலில் செய்து காண்பித்தார். இந்தியாவில், 1970ல் சென்னை பொது மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஓபன் ஹார்ட் ஆபரேஷன்


இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரணமாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத்திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறுபடியும் இதய இயக்கத்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடியும். இந்த,”ஓபன் ஹார்ட்’ (திறந்த முறை) இதய அறுவைச் சிகிச்சை முறையில் செயற்கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடிகிறது. இந்த சிறந்த முறை அறுவைச் சிகிச்சை முறையில் உடம்பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசுத்த ரத்தம் செயற்கை நுரையீரல் மிஷினில் செலுத்தப்படுகிறது. செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப்பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.

இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹைபோதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரேஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத்தன்மை (அஇஐஈ ஆஅகுஉ ஆஅஃஅNஇஉ), மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச்சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையும் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத்தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணைத்துவிடலாம்.

ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.

பைபாஸ் சர்ஜரி


பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம். இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.

பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.

இன்னும் ஒரு வாரத்தில் கூகிள் குரோம் ஓஎஸ்


கூகிள் குரோம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகலாம் என்று டெக்க்ரன்ச் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. கூகிள் நிறுவனம் குரோம் ஒஎஸ் எனும் இயங்குதளம் தயாரிப்பில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி. அது இன்னும் ஒரு வாரத்தில் தரவிறக்கத்திற்கு கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குரோம் ஓஎஸ் அடிப்படையில் லினக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் போன்று இது பெரும்பாலான ஹர்ட்வேர் களை ஆதரிக்கும் படியான டிவைஸ் டிரைவர்களை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறி. இதன் ஆரம்ப பதிப்பு நெட்புக் கணினிகளை ஆதரிக்கும் படி வெளியிடப்படும். ஏசர், அசுஸ், லெனோவா போன்ற நிறவனங்களின் நெட்புக் கணினிகளில் தடை இன்றி வேலை செய்யும் என்று எதிர் பார்க்கலாம்.

காலப் போக்கில் அனைத்து கணினி ஹர்ட்வர்களிலும் தடை இன்றி இயங்கும்படி வெளி வரும். குரோம் ஓஎஸ் அடுத்த வாரம் வெளியாகிறது என்பதற்கு கூகுளிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை. மைக்ரோசாப்ட்டால் விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகவே படுகிறது. இயங்குதள உலகில் ஜாம்பாவானாக திகழும் மைக்ரோசாப்ட்டுக்கு கூகுளால் நிச்சயம் நல்ல போட்டியை கொடுக்க முடியும். இது நமக்கும் நல்லது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review