November 13, 2009

விரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்‌ட்வேர்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமை செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்துவோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் இறுதியிலேயே இதை வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த வெர்சன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7ஐ அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ‌வெளியிடுகிறது. இதற்கு முன்னர் ஆப்பிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது.


ஆப்பிளின் புதிய வெர்சன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ- மெயிலிங், காலண்டர் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல் ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும் ‌என கூறப்படுகிறது. ஆப்பிளின் இந்தி புதிய வெர்சன் ஸ்நோ லெபர்ட் இதற்கு முந்தைய வெர்சனை விட பாதி அளவு தான். இதை இன்ஸ்டால் செய்ய 1 கிகாபைட் ரேம் ஸ்‌டோரேஜ் கெபாசிட்டி தான் தேவைப்படுமாம்.

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1.Eraser

lankasri.com

தரவிறக்கம் செய்ய.

2.Kill Disk

lankasri.com

தரவிறக்கம் செய்ய.

வைரசினைப் பரப்பும் நுளம்புகளை விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர்


முதல் தடவையாக வெஸ்ட் நெயில் என்ற வைரசினைப்பரப்பும் நுளம்புகளை மத்திய ஐரோப்பாவில் விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் பாறைகளில் காணப்படும் நீர் நிலைகளில் இனவிருத்தியாகும் “ஏசியன் றொக் பூல் மொஸ்கியூட்டோ” எனப்படும் நுளம்பினம் மத்திய சுவிட்ஸர்லாந்தில் 1,400 சதுர கிலோமீற்றர்கள் தூரம் பரவியுள்ளது என சூரிச் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,500 இடங்களில் பரிசோதித்தபோது 122 இடங்களில் இவ்வகை நுளம்பினக் குடம்பிகள் காணப்பட்டுள்ளன. இது இவ்வின நுளம்புகளின் வேகமான பரம்பலையே வெளிப்படுத்துவதாக ஆய்விற்கு தலைமைதாங்கிய விஞ்ஞானி அலெக்சாண்டர் மத்திஸ் தெரிவித்தார்.

இவ்வகை நுளம்புகளின் பிறப்பிடம் ஜப்பான், கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளாகும். வடஅமெரிக்கா, பிரானஸ் மற்றும் பெல்ஜியத்தின் சில இடங்களிலும் இவ்வகையான நுளம்புகள் இனம்காணப்பட்டுள்ளன.

இந்த நுளம்பின் மூலம் பரவும் வெஸ்ட் நெயில் வைரசு பாரிய பாரிசவாதம், சுயநினைவை இழக்கச் செய்யக்கூடிய நோயினை ஏற்படுத்தும் அபாயத்துக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் யாஹூ

இமெயில் சேவை வழங்குவதில் எந்த தளம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பதில் சரியான போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காம் ஸ்கோர் என்ற நிறுவனம் எடுத்த கணக்கின்படி கூகுள் இந்த இமெயில் ஏணியில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சம். ஏ.ஓ.எல். நிறுவனம் 10 லட்சம் குறைவாகக் கொண்டு நான்காவது இடத்திற்குச் சென்றது.

சரி, முதல் இடத்தில் உள்ளது யார்? சர்ச் இஞ்சின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை யாஹூவின் இடத்தைக் கூகுள் பெற்றிருக்கலாம். ஆனால் இமெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் யாஹூ தொடர்ந்து ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் பேருடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சம்.

இந்த விஷயத்தில் யாஹூ முதல் இடத்தைப் பெற்றிருந்தாலும், வேகமாகப் பெருகி வரும் இமெயில் தளம் என்ற வகையில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில் யாஹூவின் வளர்ச்சி 22% மட்டுமே.


புதிய வசதிகளைத் தொடர்ந்து தருவதில் கூகுள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இப்படியே போனால் கூகுள் இந்த பிரிவில் முதல் இடத்தைப் பெறுவது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். யாஹூ தன் இடத்தைத் தக்கவைக்க கூகுளைப் போல ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டே இருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வி ஆராய்ச்சிக்கு சடலங்கள் தானம் வழங்கப்படுவதை ஊக்குவிக்க சென்னையில் புதிய திட்டம்

மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களை மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டம் ஒன்று சென்னை மருத்துவ கல்லூரியில் துவங்கப்பட்டிருக்கிறது.


தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கு இந்த சடலங்கள் பெரிதும் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒருவர் இறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்பட்டால்தான் அச்சடலம் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும். ஆனால் இந்தியாவில் இறுதிச் சடங்குகள் ஒருவர் இறந்த பின்னர் நாட்கணக்கில் நடப்பதால், சடலங்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படாமல் போய்விடுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
 


மேலும் ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட சடலங்கள் துண்டுகளாக்கப்படும் என்று நினைத்து உறவினர்கள் அவற்றை கொடுக்க முன்வருவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மோஹனசுந்தரம் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review