November 13, 2009

மருத்துவக் கல்வி ஆராய்ச்சிக்கு சடலங்கள் தானம் வழங்கப்படுவதை ஊக்குவிக்க சென்னையில் புதிய திட்டம்

மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்களை மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலான திட்டம் ஒன்று சென்னை மருத்துவ கல்லூரியில் துவங்கப்பட்டிருக்கிறது.


தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கு இந்த சடலங்கள் பெரிதும் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒருவர் இறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்பட்டால்தான் அச்சடலம் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும். ஆனால் இந்தியாவில் இறுதிச் சடங்குகள் ஒருவர் இறந்த பின்னர் நாட்கணக்கில் நடப்பதால், சடலங்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படாமல் போய்விடுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
 


மேலும் ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட சடலங்கள் துண்டுகளாக்கப்படும் என்று நினைத்து உறவினர்கள் அவற்றை கொடுக்க முன்வருவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மோஹனசுந்தரம் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

November 12, 2009

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. ஆபீஸ் 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆபீஸ் 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு ஆபீஸ் 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. (உலக மக்கள் 13 என்ற எண் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பற்றிக் கொண்டிருக்கலாம்.)

சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஆபீஸ் 2010 குறித்த அறிவிப்பு வெளியானது. முழுமையான தொகுப்பின் பயன்பாடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் தனித் தன்மைகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் போன்றவை சற்று கசியத் தொடங்கின. இந்த ஆபீஸ் 2010 தொகுப்பு இது பயன்படுத்துவோருக்கான தன்மையினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபடும் மேல் மட்ட ஆய்வாள்ர்கள் மற்றும் அறிஞர்கள், விற்பனைச் சந்தையில் ஈடுபடும் அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு பிரிவுகளில் ஈடுபடுவோர் என ஒருவரின் வேலைத் தன்மைக்கேற்ப இந்த ஆபீஸ் தொகுப்பினைச் செயல்படுத்த வழி தரப்பட்டிருக்கும்.

lankasri.com


இந்த தொகுப்புடன் சேர்த்து மைக்ரோசாப்ட் இணைய அடிப்படையில் இயங்கும் ஆபீஸ் தொகுப்பினை வழங்க இருக்கிறது. வெப் பேஸ்டு அப்ளிகேஷன் என அழைக்கப்படும் இத்தொகுப்பில் எக்ஸெல், பவர்பாய்ண்ட், வேர்ட் மற்றும் ஒன் நோட் அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இவை இயக்கிக் காட்டப்பட்டன. பிரவுசரின் வழியாகச் சென்று இந்த அப்ளிகேஷன் தொகுப்புகளை இயக்கி பைல்களை நாம் தயாரிக்க முடியும். இந்த வெப் அப்ளிகேஷன்கள் சபாரி, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக இயங்கும். இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்த மார்க்கட்டில் இது போன்ற அப்ளிகேஷன்களை மைக்ரோசாப்ட்டிற்கு எதிராகக் கொண்டு வரும் கூகுள் டாக்ஸ் போன்ற மற்ற வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்குப் போட்டியாகவும் இது இருக்கும்.

lankasri.com

ஆபீஸ் தொகுப்பு 2010 இரு வகைகளில் தரப்பட இருக்கிறது. 32 பிட் அமைப்பிலும் 64 பிட் அமைப்பிலும் இயங்கும் வகையில் இரண்டு வகை தரப்படும். ஆபீஸ் தொகுப்பு ஒன்று இவ்வாறு இரண்டு வகைகளுக்கும் தரப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதன் வேர்ட் தொகுப்பின் புதுமையாக இமேஜ் எபக்ட்ஸ் கூட்டாகத் தரப்படுகிறது. வேர்ட் மற்றும் பிற ஆபீஸ் புரோகிராம்களில் பேஸ்ட் பிரிவியூ என்ற ஒட்டுமுன் காட்சி தரப்படுகிறது. இதன் மூலம் பேஸ்ட் பயன்படுத்துபவர்கள் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதனை அறிந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப பல பேஸ்ட் முறைகளைச் சோதனை செய்து பார்த்து செயல்படலாம்.

எக்ஸெல் தொகுப்பில் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்றொரு வசதி தரப்படுகிறது. ஸ்ப்ரெட் ஷீட் ஒன்றில் காணப்படும் செல் ஒன்றில் அமையும் வகையில் உள்ள சிறிய கிராப் ஆக இது இருக்கும். பவர்பாய்ண்ட் தொகுப்பில் வீடியோ எடிட்டிங் வசதிகள் தரப்படுகின்றன. பிரசன்டேஷன் ஒன்றின் வீடியோ காட்சி எப்படி இருக்கும் என்பதனை இந்த தொகுப்பின் மூலமே அறிந்து கொள்ளலாம். இதில் வாய்ஸ் அனொடேஷன்ஸ் இணைந்து இருக்கும். அவுட்லுக் இமெயில் மற்றும் காலண்டர் வசதிகளில் ஜிமெயிலில் உள்ளது போல கான்வெர்சேஷன் வசதி கிடைக்கிறது. இதற்கும் மேலாக "Ignore thread" ஒன்று தரப்படுகிறது. இதன் மூலம் மெசேஜைப் பார்த்துவிட்டு அதனை அலட்சியப்படுத்தி வைக்கும் வசதி கிடைக்கிறது. இதில் “மெயில் டிப்ஸ்” வசதி உள்ளது. இது டாகுமெண்ட் ஒன்றை இமெயில் மூலம் அனுப்புகையிலும் பலருக்கு ஒரே மெசேஜை அனுப்புகையிலும் அது நாகரிகமாக இருக்க வேண்டியதற்கான டிப்ஸ்களை அளிக்கிறது.

lankasri.com

ஆபீஸ் 2010 உடைய ஒவ்வொரு அப்ளிகேஷன் தொகுப்பிலும் பைல் கையாளும் விதங்களில் கூடுதல் வசதிகள் தரப்படுகின்றன. பைல் சேவிங், பைல் பிரிண்டிங் போன்ற பணிகளுக்கு ஒரு பேக் ஸ்டேஜ் வியூ அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் வேலை எப்படி அமையும் என முன் கூட்டியே கண்டு கொள்ளலாம். ஒரே டாகுமெண்ட்டை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் எடிட் செய்திடலாம். இதனால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாக இருந்து தயாரிக்கப்படும் பல பகுதிகள் அடங்கிய ஒரு டாகுமெண்ட்டை ஒரே நேரத்தில் அதன் ஆசிரியர்கள் அனைவரும் கையாளக் கூடிய வசதி கிடைக்கிறது.

முன்பு போலின்றி இந்த ஆபீஸ் தொகுப்பு மூன்று வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. ஆபீஸ் ஹோம் மற்றும் மாணவர்க்கான பதிப்பு ஒன் நோட், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகளுடன் கிடைக்கும். ஆபீஸ் ஹோம் மற்றும் பிசினஸ் தொகுப்பில் மேலே குறிப்பிட்டவற்றுடன் அவுட்லுக் இணைந்திருக்கும். ஆபீஸ் புரபஷனல் தொகுப்பில் மேலே சொல்லப்பட்ட அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் அக்செஸ் டேட்டா பேஸ், மற்றும் பப்ளிஷர் பேஜ் லே அவுட் புரோகிராம்கள் கிடைக்கும்.

வர்த்தகர்களுக்கான தொகுப்பினைப் பார்க்கையில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஸ்டாண்டர்ட் தொகுப்பு பயனளிக்கும். அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குப் பெறும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கான பதிப்பாக இது இருக்கும். இதில் எக்ஸெல், அவுட்லுக், பவர்பாய்ண்ட், வேர்ட், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் கிடைக்கும். இறுதியாக உள்ள இரண்டு அப்ளிகேஷன்களும் இந்த வகை பதிப்பில் புதிதாக இப்போது சேர்க்கப்படுகின்றன. ஆபீஸ் ஸ்டாண்டர் பதிப்பிற்கான லைசன்ஸ் பெற்றவர்கள் பிரவுசர் அடிப்படையிலான பதிப்பினைக் கையாளும் உரிமையினைப் பெறுவார்கள்.

lankasri.com


ஆபீஸ் 2007ல் இருக்கும் ஆபீஸ் பட்டனுக்குப் பதிலாக மெனு பட்டன் தரப்படும். இதன் மூலம் முழு விண்டோ பைல் மெனுவினைப் பெறலாம். இதனை பேக் ஸ்டேஜ் வியூ என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதன் மூலம் பிரிண்டிங் மற்றும் பைல் ஷேரிங் பணிகளை எளிதாகக் கையாள முடியும். ஆபீஸ் 2010 குறித்த விஷயங்கள் வெளியானவுடன் பலர் விதம் விதமான சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அவற்றை மைக்ரோசாப்ட் தெளிவாகத் தீர்த்து வைத்துப் பல கூடுதல் தகவல்களைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் இன்டர்நெட் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் ஒரே செயல்பாட்டுடையனவாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. இன்டர்நெட் வழி பயன்பாட்டிற்குத் தரப்படும் தொகுப்பில் வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் மட்டுமே இருக்கும். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் எல்லைகளும் சுருக்கமாகவே இருக்கும். வெப் அடிப்படையிலான ஆபீஸ் 2010 தொகுப்பினால் பின் என்ன பயன்? இது முற்றிலும் பிரவுசர் வழியாகச் சென்று இயக்கப்படும் தொகுப்பாகவும் குறைந்த அளவே வசதி கொண்டதாகவும் இருக்கும். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒரு டாகுமெண்ட்டை பலர் எடிட் செய்திடலாம்.

வெப் அடிப்படை ஆபீஸ் தொகுப்பில் உருவாகும் பைல்களை ஆன்லைனிலேயே சேவ் செய்து வைக்க முடியுமா? முடியும். ஆனால் அதற்கு இலவசமாகக் கிடைக்கும் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் அக்கவுண்ட் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும். வெப் ஆபீஸ் தொகுப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்குமா? ஆம், முற்றிலும் இலவசமாகவே இது கிடைக்கும். இலவச விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் இதனைப் பெற முடியும். வெப் ஆபீஸ் தொகுப்பில் அனைத்தும் கிடைக்கிறது என்றால் நான் ஏன் என் பெர்சனல் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு 2010 ஐ இன்ஸ்டால் செய்திட வேண்டும்?

lankasri.com

வெப் ஆபீஸ் தொகுப்பு குறிப்பிட்ட ஒரு எல்லை வரையிலான வசதிகளையே தரும். நான்கு அடிப்படை புரோகிராம்களே இதில் கிடைக்கும். கூடுதல் வசதிகளையும் நவீன் தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பினை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதிலும் ஆபீஸ் 2007ல் உள்ளது போன்ற ரிப்பன் மெனு இருக்குமா? ஆம். இதிலும் அதன் பயன்பாடு இருக்கும். ஆனால் இன்னும் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு இருக்கும். ஆபீஸ் தொகுப்பு அனைத்தையும் இதன் மூலம் பெற்றுக் கையாள முடியும். பொதுவான வேலைகளை இப்போது ரிப்பன் மெனுவில் இணைக்கவும், தேவையற்றவற்றை நீக்கவும் முடியும்.

வேர்டில் என்ன புதுமை? பேஸ்ட் பிரிவியூ ஆப்ஷன், டெக்ஸ்ட்டுக்கு ஸ்டைல் அமைப்பதில் கூடுதல் வசதி, வேர்ட் புரோகிராமினை விட்டு வெளியேறாமல் ஸ்கிரீன் ஷாட்களை இணைக்கும் வசதி, இமேஜ் எடிட் செய்வதற்கான புதிய டூல்ஸ் எனப் பல புதுமைகள் உள்ளன. அவுட்லுக்கில் என்ன புதுமை? ஜிமெயிலில் உள்ளது போல சார்ந்த தொடர்பான இமெயில்களை ஒரு குழு உரையாடல் போல வைத்துப் பார்க்கும் வசதி தரப்படுகிறது. பொதுவான வேலைகளை மேற்கொள்ள ஷார்ட் கட் வசதி, காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு இன்பாக்ஸிலிருந்தே செல்லும் வசதி, ஆன் டிமாண்ட் மொழி பெயர்ப்பு டூல்ஸ் ஆகியவை புதிய வசதிகளாகும். எக்ஸெல் என்ன தருகிறது? ஸ்பார்க்லைன் என்ற (மேலே விளக்கப்பட்டுள்ளது) சிறிய சார்ட் இணைக்கும் வசதி. டேபிள் அமைப்பு மற்றும் கையாள்வதில் கூடுதல் வசதி மற்றும் டேட்டாக்களைக் கையாள்வதில் கூடுதல் வசதிகள் ஆகியவை உள்ளன.

lankasri.com

பவர் பாய்ண்ட்டில் என்ன புதுமை? ஆச்சரியப்படத்தக்க புதுமை இதில்தான் உள்ளது. பலவகையான பார்மட் வீடியோக்களை இதில் இணைக்கலாம்; இணைத்த பின் இத்தொகுப்பில் இருந்தே அவற்றை எடிட் செய்திடலாம். முதல் முறையாக உங்கள் ஸ்லைட்ஷாவினை ஒரு முழு விண்டோஸ் மீடியா பைலாக மாற்றிப் பெறலாம். உங்களுக்கு ஆபீஸ் 2010 தொகுப்பினை அது முழுமையாக வெளிவருவதற்கு முன் சோதனை செய்து பார்க்க ஆவலாக உள்ளதா? இதற்கென மைக்ரோசாப்ட் ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது.சென்று உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


தள முகவரி : இங்கே கிளிக் செய்யங்கள்

திடுக்கிடும் ஒரு தகவல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



நீங்களே பாருங்கள் தமிழர்களை மிதிக்கும் செயலாக அதாவது இந்து தமிழர்களை மேலைத்தைய நாட்டவர்கள் இவ்வாறெல்லாம் எம்மை காயப்படுத்த வேதனைப்படுத்த முடியுமோ அவ்வாரெல்லாம் செய்கின்றனர். இந்த மொடல் மனிதன் அணிந்திருக்கும் உள்ளாடையில் இந்து மக்களின் கடவுளான லக்சுமி அவர்களின் உருவப்படம் பொறித்து விற்க்கப்படுகின்றதாம். இந்துமக்களின் அனைத்து கடவுள்களின் படங்களும் இவ்வறுதனாம் விற்க்கப்படுகின்றதாம். இந்த தயாரிப்பு மேலைத்தைய நாடுகளில் அமோகவரவேற்பை பெற்டுள்ளதாம். தமிழ் மக்களே இதை பார்த்த நீங்களே இதற்கு ஓர் முடிவு கட்ட வேண்டும். அவர்கள் குழந்தையையும் கில்லிவிட்டு  தொட்டிலையும் ஆட்டிவிடுகின்றார்கள். தமிழர்களே துயில் எழுங்கள்.

விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட

கோப்புகளை சேமித்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கமான ஒன்றுதான். விண்டோஸ்சில் இது எளிதான வேலை அல்ல. நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும் தெளிவான முடிவுகளை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

விண்டோஸ்சில் கோப்புகளை தேடுவதற்கு என்று ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது. சில நொடிகளில் சரியான முடிவுகளை தந்து விடும். நன்றாக வேலை செய்கிறது. மேம்படுத்த பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக அதை வடிவமைத்தவர் தெரிவிக்கிறார்.

முதலில் உபயோகிக்கும் போது கோப்புகளை இன்டெக்ஸ் செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அப்புறம் மின்னல் வேகம்தான். இதை பற்றி மேலும் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

lankasri.com



இங்கே சென்று தரவிறக்கி உபயோகித்து பாருங்கள். நீங்களே இதன் வேகத்தை உணருவீர்கள்.

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!



ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?’ என்று கேட்டால் நீங்கள் `இல்லை’ என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதைம் தாண்டி இதய பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மைம் கூட இதய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?

மன அழுத்தம்

“இன்றைக்கு மாநகர வாழ்க்கைமுறை மனஅழுத்தத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. பலரிடம் மனஅழுத்த பிரச்சினை கண்டுபிடிக்கபடாமலே போகிறது” என்கிறார், மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ராஜிவ் பகவத். “நீண்ட தூர பயணம், ஒழுங்கற்ற நேர முறைகளுடன், சுற்றுச் சூழல் மாசுபாடும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துகின்றன” என்கிறார் அவர்.

`இதயநோய் பிரச்சினை ஏற்படும் வயதும் குறைந்து கொடே வருகிறது’ என்று மருத்துவர்கள் `பகீரிட’ச் செய்கின்றனர். பாரம்பரியமாக இதயநோய் பிரச்சினை இல்லாத ஒரு 28 வயது இளைஞர் தொடர் புகைபழக்கத்தின் காரணமாகவே இறந்து விட்டார் என்கிறார், மற்றொரு மருத்துவரான சந்தர் வஞ்சானி. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மற்றொரு நபரும் மனஅழுத்தம் காரணமாக மாரடைப்புக்கு உள்ளாக நேரிட் டது என்று அவர் கூறுகிறார். “கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும், ஒழுங்கில்லாத கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை நோய்- உயர் ரத்தஅழுத்த பிரச்சினை தொடர்பாக, 25 முதல் 39 வயதுக்கு உட் பட்ட 10 பேர் என்னை வந்து பார்த்திருக் கின்றனர்” என்கிறார் சந்தர். மனஅழுத்தத் துக்கு உள்ளாகாமல் நம்மை நாமே காத்துக் கொள்வதன் முலம் இதயத்தைம் காக்க லாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
போதுமான தூக்கம்

மிகவும் `பிசி’யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்’ வேக வாழ்க்கைமுறைக்கு பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்’ என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். “இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராக பராமரப்பிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொடிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை’ பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது” என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.
அதிகமாக உடற்பயிற்சி செய்வது

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “நம்மை நாமே தடித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது” என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜுதா. “அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாக பலன் தரும். அதை போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது” என்கிறார் ருஜுதா.

நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிக பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. “போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது’ என்று ஆகிவிடுவார்கள்” என்று ருஜுதா எச்சரிக்கிறார்.

முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையை பாதிக்க அனுமதிக்காதீர்கள்.

சென்னை `முதலிடம்’

நாடு தழுவிய அளவில் 8 ஆயிரத்து 469 பேரிடம் மேற்கொள்ளபட்ட ஓர் ஆய்வில், 49.1 சதவீத இந்தியர்களுக்கு இதயநோய் ஏற்படுவதற்கான உயர் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில், 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் (1598 பேர்) இருபது தெரிய வந்திருக்கிறது.

அதிலும் அபாய பட்டியலில் முதலில் இருப்பவர்கள் நமது சென்னைக்காரர்கள்தான் (53.8 சதவீதம்). அடுத்த இடம் மும்பைக்கு (49.6 சதவீதம்). இந்நிலைக்கான காரணங்களாக மருத்துவர்கள் கூறுவது, நீண்ட வேலைநேரம், பயணம், ஆரோக்கியமற்ற உணவு முறை, போதுமான உடற்பயிற்சி இல்லாத நிலை போன்றவை ஆகும். கொஞ்சம் கவனம் எடுத்து பொறுப்பாக நடந்துகொண்டால் போதும், இதயம் காக்கலாம் என்கின்றனர் இதய நிபுணர்கள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review