November 12, 2009

எச்ஐவி நோயின் அறிகுறிகள்

எச்ஐவி நோய் பாதித்தவர்களுக்கு கீழ் கூறும் அறிகுறிகள் காணப்படும். ஆனால் இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவருக்கும் எச்ஐவி நோய் இருக்கும் என்பது அர்த்தமாகாது.

எச்ஐவி பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது காய்ச்சல் மூலம் வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது.

தீவிர எச்ஐவி பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து கட்டி) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது.

இந்த அறிகுறிகள் கூட எச்ஐவி தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் எச்ஐவி தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள திசுக்கள் இதனால் பாதிக்கின்றன.

இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் (வெள்ளை அணுக்கள்) அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் எச்ஐவியின் வேகம் சற்று குறைகிறது.

எச்ஐவி தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு எச்ஐவி தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. எச்ஐவி தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரிவது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

"எய்ட்ஸ்" வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு வெள்ளை அணுக்கள் குறைவதால் எதிர்ப்புசக்தி குறைகிறது. இதனால் எளிதாக எந்த நோயும் எய்ட்ஸ் நோயாளியைத் தாக்குகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு தொற்று நோயாலோ அல்லது பெரிய நோய்த் தாக்குதலாலோத் தான் எளிதில் மரணமடைகிறார்கள்.

எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்ந்து, சுகாதாரமாக உடலைப் பேணி வந்தால் எய்ட்ஸ் நோயாளிகளும் நலமாக பல ஆண்டுகள் உயிர் வாழலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

அழியும் நிலையில் அரியவகை கடல் குதிரைகள்

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதி தென் தமிழகத்தில்தான் உள்ளது. இங்கு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சுமார் 3600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த அரியவகை உயிரினங்களில் கடற்குதிரை என்னும் ஒருவகை மீன் இனமும் ஒன்று. இதன் தலையானது குதிரையின் தலைபோன்று இருப்பதால், இதற்கு கடற்குதிரை எனப் பெயர் ஏற்பட்டதாம்.

ராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையுள்ள ஆழம் குறைந்த கடல்பகுதியில் காணப்படும் இக் கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும்,சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம்.

உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.

முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறிதாக இருந்தாலும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதியுடையதாகவும் உள்ளது. தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.

பல்வேறு சிறப்புகளை உடைய இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினத்தின் விற்பனை விலை கிலோவுக்கு ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை உள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ருசி மிகுந்த சாறு வகைகளும், மருத்துவப் பொருள்களும் தயாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு இதைப் பயன்படுத்துகின்றனர். உலர்ந்த கடற்குதிரையை வறுத்து அதன் தூளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். தேங்காய் எண்ணெயில் கலந்து வெட்டுக் காயங்களுக்கும் இப் பகுதி மக்கள் உபயோகிக்கின்றனர்.

ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்தாக இருப்பதால், உலக அளவில் இது அதிகமாகத் தேவைப்படுகிறது.

கடலுக்கடியில் சங்கு மற்றும் கடல் அட்டை போன்றவற்றை எடுப்போர் இதனையும் பிடிக்கின்றனர். கடலுக்குள் கடல் தாவரங்கள் உள்ள பகுதிகளுக்குள் மூழ்கி கடற்குதிரைகளையும் கைகளால் சேகரிக்கின்றனர். சுமார் 6 முதல் 10 மீனவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது இதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், இந்த அரியவகை உயிரினம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது.

ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு 120 முதல் 350 கடற்குதிரைகள் வரை பிடிக்கப்படுகின்றன.

இருக்கும் சிலவற்றையாவது அழிவிலிருந்து பாதுகாக்க அழிவுதரும் வலைகள் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும்.

இவற்றை பிடிப்பவர்கள் பற்றிய தகவல் தருவோருக்கு அரசு ரகசிய ஊக்கத்தொகையும் வழங்கலாம். இது போன்ற அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ள கடல்பகுதியில் அரசு மிதவை வேலிகளையும் அமைக்கலாம். இல்லையேல் இந்த அரியவகை உயிரினம் இனிவரும் இளைய சமுதாயத்துக்கு என்னவென்றே தெரியாமல் போய்விடும்.

பாக்டீரியாக்களின் ரைபோசோம்கள்

ரைபோசோம்கள் என்பவை மனித செல்களில், புரதச்சத்தை தயாரிக்கும் தொழிற்சாலைகளாக செயற்படுகின்றன. மனித செல்களில் இருக்கும் மரபணுக்கள்(டி.என்.ஏ), உயிர்த்தன்மையின் அடிப்படை கட்டமைப்பை தம்முள் கொண்டிருக்கின்றன.

இந்த கட்டமைப்பு தகவல்களை பயன்படுத்தி உயிர்வாழும் புதிய கலங்களை உருவாக்கும் பணியை இந்த ரைபோசோம்கள் செய்கின்றன.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரைபோசோம்களின் அடிப்படை கட்டமைப்பை, அணு அணுவாக பிரதி எடுத்த செயற்பாட்டுக்காகவே, இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் இந்த ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களின் இந்தப் பங்களிப்பு காரணமாக, இன்றைய மருத்துவ சிகிச்சையில் பயன்படும் பல்வேறு உயிர்காக்கும் ''ஆண்டிபயாடிக்ஸ்'' எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்க முடிந்திருக்கிறது.

இத்தகைய ரைபோசோம்களின் செயற்பாடுகள் இல்லாமல் பாக்டீரியாக்கள் உயிர்வாழ முடியாது. இத்தகைய பாக்டீரியாக்களின் ரைபோசோம்களை குறிப்பிட்டு தடுக்கும் வகையில், அவற்றின் அணுக்கட்டமைப்பை இவர்கள் முழுமையாக பிரதியெடுத்ததன் பயனாக, பல் வேறு நோய்களுக்கு புது வகையான சிகிச்சை முறைகள் உருவாகியிருக்கின்றன.

ஃபேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம்

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர் என்று பொருள்.

தகவல்கள் அழகானது (இன்பர்மேஷன் ஈஸ் பியூட்டிபுல்) என்னும் பெயரில் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள்து.

தகவல்களை தகவல்களாக பார்க்காமல் அவற்றை காட்சி ரீதியாக உருவகப்படுத்திக்கொண்டு பார்த்தால் தகவல்கள் உணர்த்தும் பொருளை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுபவர்கள் இருக்கின்ற‌னர்.இப்ப‌டி காட்சி ரிதியாக பார்பது மிகவும் சுவாரஸியத்தை அளிக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.

காட்சிரீதியாக‌ த‌க‌வ‌ல்க‌ளை காணும் முறை இன்போகிராபிக்ஸ் என்னும் பெய‌ரில் அழைக‌ப்ப‌டுகிற‌து. தமிழில் தகவல் சித்திரம் என்று வைத்துக்கொள்வோமே.இவ்வாறு இண்டெர்நெட் தொட‌ர்பான‌ ப‌ல‌ அழ‌கிய‌ த‌க‌வ‌ல் சித்திர‌ங்க‌ள‌ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.இத்த‌கைய‌ சித்திர‌ங்க‌ளை உருவாக்குவ‌தில் புக‌ழ் பெற்ற‌ க‌லைஞ‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர்.

இந்த‌ பிரிவில் பிர‌சித்திப்பெற்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ளும் உள்ள‌ன‌.மேலே சொன்ன‌ த‌ள‌ம் இந்த‌ வ‌கையை சேர்ந்த்து தான்.ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ எழுதிக்கொண்டிராம‌ல் சொல்ல‌ வ‌ரும் விஷ‌ய‌த்தை அழ‌காக‌ ஒரு த‌க‌வ‌ல் சித்திர‌த்தின் மூல‌ம் காட்சி ரீதியாக‌ சொல்லி விடுவ‌து தான் இந்த‌ தள‌த்தின் த‌னிச்சிற‌ப்பு.

அழகான‌ ப‌ட‌ங்க‌ளின் மூல‌ம் இந்த‌ த‌ள‌த்தில் சுவையான‌ ச‌ங்க‌திக‌ளை தெர்ந்துகொள்ள‌ முடியும்.

இந்த‌ தள‌த்தில் ச‌மீப‌த்தில் ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்க‌ளின் ப‌ய‌ன்பாட்டை விவ‌ரிக்கும் த‌க‌வ‌ல் சித்திர‌ம் வெளியிட‌ப்ப‌ட்ட‌து.ஃபேஸ்புக்,ஃபிளிக்க‌ர்,மைஸ்பேஸ் உள்ளிட்ட‌ த‌ள‌ங்க‌ளின் ப‌ய‌னாளிக‌ளில் பெண்க‌ளே அதிக‌ம் உள்ள‌தாக‌ இந்த‌ சித்திர‌ம் சுடிக்காட்டுகிற‌து.

யூடியூப்,ம‌ற்றும் ,லின்கிட் இன் போன்ற‌ தள‌ங்க‌ளில் இந்த‌ எண்ணிக்கை ச‌ம‌ அல‌வில் உள்ள‌ன‌.

இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் ஆச்ச‌ர்ய‌மான‌வை.கார‌ண‌ம் பொதுவாக‌ இண்டெர்நெட் ப‌ய‌ன்பாட்டில் ஆண்க‌ளே அதிக‌ம் இருக்கும் நிலையில் ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்களில் பெண்க‌ள் முன்னிலை வகிப்ப‌து குறிப்பிட‌த்தக்க‌ விஷ‌ய‌ம் தான்.ஒருவேளை பெண்க‌ள் உற‌வை வ‌ளர்ப்ப‌தில் ஈடுபாடு மிக்க‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தை உண‌ர்த்துவ‌தாக‌ இத‌னை கொள்ள‌லாமா?என்னும் கேள்வியும் எழுந்துள்ள‌து.

நீற்க‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் வெளியான‌ ஒரு புள்ளி விவ‌ர‌த்தின் ப‌டி ஆன்லை க‌லைக்க‌ள‌ஞ்சிய‌மான‌ விக்கிபீடியாவில் த‌க‌வ‌ல்களை ச‌ம‌ர்பித்து திருத்தும் தொண்டை செய்யும் ப‌ய‌னாளிக‌ளில் பெண்க‌ள் 14 ச‌த‌வித‌த்திற‌கும் குறைவாக‌வே இருக்கின்ற‌ன‌ர் என்று தெரிய‌ வ‌ந்துள்ள‌து.பெரும்பாலும் ஆண்க‌ளே விக்கிபீடியாவில் கட்டுரைக‌ளை உருவாக்கி வ‌ருவ‌தை இந்த‌ புள்ளிவிவ‌ர‌ம் உண‌ர்த்துவ‌தாக‌வும் க‌ருத‌ப்பட்ட‌து.

அது ம‌ட்டும‌ல்ல விக்கிபீடியாவின் த‌மிழ் ப‌திப்பை பொருத்த‌வ‌ரை பெண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு இர‌ண்டே இர‌ண்டு ச‌த‌வீத‌ம் தான் என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

இணைய‌வாசிக‌ளின் ப‌ங்க‌ளிப்பில் உருவாகும் புது யுக‌ க‌லைக்க‌ள‌ஞ்சிய‌ம் ஆண்க‌ளின் ப‌டைப்பாக‌வே இருப்ப‌தாக‌ க‌ருதப்ப‌டும் நிலையில் ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்க‌ளில் ம‌ங்கைய‌ர் ராஜ்ஜிய‌ம் ந‌ட‌ப்ப‌து ஆச்ச‌ர்ய‌ செய்தி தானே.

ஐ போனில் இல்லாதது நோக்கியாவில் உள்ளது

அண்மையில் வெளியான நோக்கியா 5800 ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனுக்குச் சரியான போட்டியைத் தந்துள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் நோக்கியாவில் உள்ள சில சமாச்சாரங்கள் ஐ போனில் இல்லை என்பது தெளிவாகிறது. அவற்றை இங்கு காணலாம்.

முதல் முதலில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2007ல் ஐ போன் குறித்து செய்தி வெளியிட்டபோது அனைத்து மொபைல் போன் நிறுவனங்களும் தாங்களும் ஏதாவது செய்திட வேண்டும் எனத் துடித்தன. பல நிறுவனங்களிடமிருந்து ஐ போனில் உள்ளதைப் போல டச் ஸ்க்ரீன் கொண்டு போன்கள் வந்தன. ஆனால் ஐ போனின் டச் ஸ்கிரீன் அளவிற்கு யாரும் வர முடியவில்லை. நோக்கியா இதனை அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தது. பலரும் ஏன் நோக்கியா டச் ஸ்கிரீன் போன் ஒன்று தர மறுக்கிறது என்று கேட்கும் அளவிற்கு நோக்கி யாவின் அமைதி இருந்தது. இந்த கேள்வி களுக் கெல்லாம் பதிலாக நோக்கியா 5800 வெளி வந்துள்ளது. ஆனால் மற்ற நிறுவனங்களின் டச் ஸ்கிரீன் போன்களெல்லாம் தர முடியாத போட்டியை ஐ போனுக்கு நோக்கியாவின் போன் தருமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல முடியும். இனி சில வசதிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்

கேமரா மற்றும் வீடியோ ரெகார்டிங்:
நோக்கியாவின் முதல் டச் ஸ்கிரீன் போன் 3.2 மெகா பிக்ஸெல் கேமரா கார்ல் ஸெய்ஸ் லென்ஸுடன் 3 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், ஆட்டோ போகஸ் மற்றும் டூயல் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பேக்வேர்ட் கேமராவும் தரப்பட்டுள்ளது.

ஆப்பிள் 3ஜி ஐ போனில் 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளாஷ் சப்போர்ட் இல்லை. நோக்கியா நொடிக்கு 30 பிரேம்கள் வேகத்தில் வீடியோ ரெகார்டிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 640 து 480 ஆக உள்ளது. 4 எக்ஸ் வீடியோ டிஜிட்டல் ஸூம் கொண்டுள்ளது. போனின் முன் பக்க கேமரா வீடியோ அழைப்பு வசதிக்கு தரப்பட்டுள்ளது. இதில் 5 மணி நேரம் வீடியோ இயக்கிப் பார்க்கலாம். 3.6 மணி நேரம் வீடியோ ரெகார்டிங் செய்யலாம்.

டிஜிட்டல் மியூசிக்:
உலகின் மிகப் பெரிய மொபைல் போன் தயாரிப்பாளரான நோக்கியா, தன் 5800 போன் மூலம் டிஜிட்டல் மியூசிக் பிரிவிலும் ஆப்பிள் நிறுவனத்தை போட்டிக்கு அழைத்துள்ளது. வரும் ஆண்டு தொடக்கம் முதல் ‘இணிட்ஞுண் ஙிடிtட Mதண்டிஞி’ என்ற மியூசிக் ஸ்டோர் வசதியினை இலவச பதிவாக ஓர் ஆண்டு தர இருக்கிறது. மேலும் 5800 போனில் நிறைய மியூசிக் பாடல்கள் பதியப்பட்டுத் தரப்படுகின்றன. ஆப்பிள் போன் வைத்துள்ளவர்கள் அதன் இணையதளமான ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் சென்று பாடல்களை இறக்கிப் பதியலாம் என்றாலும் அவை இலவசம் இல்லையே. டவுண்லோட் செய்வதற்கென எந்த சலுகைத் திட்டத்தினையும் ஆப்பிள் அறிவிக்கவில்லை.

மாற்றக்கூடிய பேட்டரி: ஆப்பிள் 3ஜி ஐபோனில் நமக்கு ஒரு ஏமாற்றம் உள்ளது. நாமே மாற்றக் கூடிய பேட்டரி அதில் இல்லை. பேட்டரி இணைத்தால் எடை கூடும் என்று ஆப்பிள் பேட்டரியை வைக்க வில்லை என அறிவித்தது. ஆனால் மார்க்கட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பேட்டரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் நோக்கியா ஊரோடு ஒத்துப் போய் உள்ளது. நோக்கியாவின் பேட்டரி ஜி.எஸ்.எம் வகை தொடர்புகளில் ஒன்பது மணி நேரம் இயங்குகிறது. எச்.எஸ்.டி.பி.ஏ. எனில் ஐந்து மணி நேரமும், மியூசிக் இசைப்பது எனில் 35 மணி நேரமும் வீடியோ பார்ப்பது எனில் 3 மணி நேரமும் தாக்குப் பிடிக்கிறது. எந்த பயன்பாட்டில் இல்லை என்றால் இது 17 நாட்களுக்கு அப்படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐ போன் 3ஜி பயன்பாடு எனில் 300 நிமிடங்கள் பேசலாம் என்றும் 2ஜி பயன்பாடு எனில் 600 நிமிடங்கள் பேசலாம் என்றும் இயங் காத போது 300 மணி நேரம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

புளுடூத் ஸ்டீரியோ:
நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனை ஸ்டீரியோ புளுடூத் வசதியுடன் இணைந்து செயல்பட வைக்கலாம். கார்களிலும் இதே வகையில் இணைக்கலாம். ஆனால் ஆப்பிள் ஐபோனை இவ்வாறு பயன்படுத்த முடியாது. புளுடூத் இணைப்பில் ஏ2டிபி வசதியை ஐ போனில் ஏற்படுத்த முடியாது. மேலும் புளு டூத் வழியாக ஐபோனில் எம்பி3 உள்பட பைல்களைப் பங்கிடும் வசதி இல்லை.

மெசெஜிங்:
ஐ போனில் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். மெசேஜ்களை பார்வேர்ட் செய்திட முடியாது. அது போல தடை எதனையும் நோக்கியா தரவில்லை. நோக்கியாவில் எஸ்.எம்.எஸ். செய்திகளை மொத்தமாக அழிக்க முடியும். மெசேஜ் சைஸ் 600 கேபி வரை அனுமதிக்கப்படுகிறது. எம்.எம்.எஸ். செய் திகள் தானாக ரீ சைஸ் செய்யப்படுகின்றன.

அடோப் பிளாஷ்:
பத்திரிக்கை செய்திகளில் வந்த தகவல்களின்படி அடோப் நிறுவனம் ஆப்பிள் ஐ போனுக்கான பிளாஷ் தொகுப்பு ஒன்றை விரைவில் தர இருக்கிறது. அது கிடைக்கும் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியதுதான். ஆனால் நோக்கியா 5800 வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே இதில் அடோப் பிளாஷ் சப்போர்ட் தரப்பட்டிருக்கிறது. ஆன்லைன் வசதி உள்ளதனால் பல இணைய தள விஷயங்களைப் பெற்றுக் காண பிளாஷ் தேவையாய் உள்ளது. இது இல்லை என்றால் அந்த இடங்களில் வெற்று இடங்கள் தெரியவரும். மேலும் ஐபோனில் பிளாஷ் பயன்படுத்தினால் பிரவுசிங் தாமதமாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆனால் ஐ போனில் தேர்ந்தெடுத்து தரப்படும் யு-ட்யூப் வீடியோக்களை ரசிக்கலாம்.

விலை:
ஆப்பிள் ஐ போன் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் வழியாக மட்டும் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி விலை ரூ. 31,000 மற்றும் 16ஜிபி விலை ரூ. 36,000. இந்த வகையிலும் நோக்கியா இதற்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டச்/கீ போர்டு:
நோக்கியா தகவல்களை உள்ளீடு செய்வதற்கு பல வழிகளைக் கொண்டுள்ளது. ஸ்டைலஸ் கொண்டு கையால் எழுதுதல், ஸ்டைலஸ் கொண்டு எழுதக் கூடிய சிறிய குவெர்ட்டி கீ போர்டு, முழுத் திரையிலான குவெர்ட்டி கீ போர்டு, எண்களும் எழுத்துக்களும் இணைந்த கீ போர்டு எனப் பல வசதிகள் உள்ளன. ஆப்பிள் ஐ போனில் ஸ்டைலஸ் இல்லை. ஆனால் தனியே வாங்கி இணைத்துக் கொள்ளலாம். மேலும் எழுத்து எண் இணைந்த கீ போர்டு மற்றும் லேண்ட்ஸ்கேப் கீ போர்டு இதில் தரப்படவில்லை.

கூடுதல் நினைவகம்:
நோக்கியா போனில் 81 எம்பி மெமரி உள்ளது. 8 ஜிபி மைக்ரோ எஸ்.டி. கார்ட் தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை உயர்த்தலாம். ஐபோன் இரு மாடல்களில் 8 மற்றும் 16 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. இவற்றை உயர்த்த முடியாது. நீட்டிப்பதற்கான மெமரி ஸ்லாட் இல்லை. ஐ போனின் 2ஜி போனிலும் இந்த குறை உள்ளது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review